Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்ஆரம்பமே அழகாய் கேரளாவின் நீர்நிலையில் வெள்ளை வண்ண எழுத்துக்கள். Young Super Star சிலம்பரசன் என்று ஆரம்பம். ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வரும் போது ஆராவாரமான கைத்தட்டல். படம் சர்ச்சில் ஆரம்பிக்கிறது. த்ரிஷாவின் கல்யாணம். மன்னிக்க ஜெஸ்ஸியின் கல்யாணம். சிம்பு.. அவ்வ்வ்.. கார்த்திக் இருக்கிறான். அவன் பார்வையில் படம்.

“உலகத்தில இத்தனை பொண்ணுங்க இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”
இதே வசனம் நாலு முறை படத்தில் வருது. வேறு ஆட்கள். ஏன் ஜெஸ்ஸியே ஒரு முறை கேட்கிறாள். ப்ளாஷ்பேக்கில் படம் செல்ல ஜெஸ்ஸி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குடும்ப வாரிசு கார்த்திக். பார்த்தவுடனே பத்திக்கிச்சு ஜெஸ்ஸியின் மேல் காதல். எதிர்பாராமல் சட்டென காதலை சொல்ல ஜெஸ்ஸி முறைக்கிறாள். அவள் பாட்டியின் வீட்டுக்கு கேரளா செல்ல அங்கும் தொடரும் கார்த்திக். கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடிக்க அவனை தன்னை மறக்க சொல்ல நண்பர்களாய் இருக்கலாம் என்கிறான். இப்படியாக பல நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அவன் காதலை அவள் மறுக்க.. முக்கிய விஷயம் கார்த்திக்கை விட ஜெஸ்ஸி ஒரு வயது பெரியவள். கிறிஸ்தவ குடும்பத்தைத் சேர்ந்ததால் தன் தந்தை ஒரு ஹிந்துவிற்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டார் என்று மனம் குழம்பும் ஜெஸ்ஸி.. ஒரு பக்கம் கார்த்திக்கை பிடிச்சிருக்கு ஆனால் காதலில்லைன்னு.. குழம்ப.. படம் இப்படியே செல்ல.. ஒரு பிரச்சனையில் ஜெஸ்ஸியின் அண்ணனை கார்த்திக் அடிக்க அவசர அவசரமாய் ஜெஸ்ஸிக்கு கல்யாணம் நிச்சயிக்கிறார்கள். மனம் கேட்காமல் அவள் திருமணத்திற்கு கார்த்திக் செல்ல அங்கே… படத்தின் இடைவேளை…
அதன்பின் அழகாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகள், சோகம், சில சந்தோஷம் என பொறுமையாய் படம் நகர்ந்து இறுதியில் என் பார்வையில் சிறப்பான முடிவு..

படத்தில் மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ஆர். உறுத்தாத பாடல்கள் படத்தின் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிண்ணனி இசை கேட்கத் தேவையில்லை. அவ்வளவு அழகாய் கையாளப்பட்டிருக்கிறது. அதிலேயும் காதலை மறுத்து ஜெஸ்ஸி செல்ல முகத்தில் சோகம் அப்பி கார்த்திக் இருக்க எதிர்பாராதவிதமாய் சோகவயலின் இல்லாமல் பேஸ்கிதாரில் வெஸ்டர்ன்.. பின்னிட்டாரு.. ப்ரண்டாஸ் இருக்கலாம்னு கார்த்திக் சொல்லும் இடத்தில் முஸ்தபா பி.ஜிஎம். சூப்பரோ சூப்பர்.

நடிப்பு: இதுவரை பார்த்திராத சிலம்பரசன். அடக்கி வாசித்திருக்கிறார். அவ்வளவு அழகாய் இருக்கிறார். காதலை சொல்லும் இடத்திலும் குறும்பு கொப்பளிக்கும் இடத்திலும் அட்டகாசம். நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் கௌதம் மேனன். பாத்திரமறிந்து நடித்திருக்கிறார் சிம்பு. சிம்புவை பார்க்காமல் கார்த்திகை பார்ப்பது மிகப் பெரிய ப்ளச். ஜெஸ்ஸியாய் த்ரிஷா.. இவ்வளவு அழகா த்ரிஷாவை பார்த்தில்லை. கண்களுக்கு நிறைவாய் பாந்தமாய் ஜொலிக்கிறார். அழகோ அழகு. நடிப்பிலும் குறையில்லாமல் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். குறிப்பாய் சொல்ல வேண்டிய நபர், கணேஷ். இவர் படத்தின் தயாரிப்பாளராம். சீரியஸான முகத்தில் பேசினாலும் அவரின் டயலாக் டெலிவரி கிச்சுகிச்சு மூட்டுகிறது. காமெடிக்கான விஷயத்தை அவர் வரும் காட்சிகள் நிறைவு செய்கிறது. இரண்டு காட்சியில் வந்தாலும் கலக்கும் கே.எஸ்.ரவிக்குமார். 

கேமரா: மனோஜ் கையாண்டிருக்கிறார். கேரளா காட்சிகளும், மால்டா மற்றும் நியூயார்க் காட்சிகளும் அழகழகாய் படமாக்கியிருக்கிறார். உறுத்தாத வண்ணங்கள் காதலுக்கே உரிய நீலம் படம் முழுக்க அழகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபாஷ். திரையில் சிம்புவும் த்ரிஷாவும் அவ்வளவு அழகாய் தெரிகிறார்கள். Made for each other மாதிரி.
அப்புறமாய் ஆர்ட்.. பாடல்கள். நிறைவாய் செய்திருக்கிறார்கள். படத்தின் ஒலிப்பதிவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். காதைப்பொத்திக் கொள்ளும்படி நாராசமாய் சத்தங்கள் இல்லாததற்கு.

எழுத்தும் இயக்கமும்: கௌதம் வாசுதேவ் மேனன். வாரணம் ஆயிரம் மாதிரி இப்படமும் வர்ணனையாக வருவது தான். ஆயினும் சிக்கல் இல்லாமல் பொறுமையாய் சம்பவங்கள் கையாளப்பட்டிருக்கிறது. காதல் பிறப்பதை சொல்வதிலும் அடுத்தடுத்த சிக்கலை சொல்வதிலும் அவசரமே இல்லாமல் பொறுமையாய் சொல்லும் திரைக்கதை. அதனால் சில இடங்களில் நம் பொறுமை சோதிப்பது போல் தோன்றினாலும் தோன்றலாம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே படத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. தேவைக்கேற்ப தான் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திர குணாதிசயங்களும் விரிவடைய நம்முன்னே எல்லாம் நடப்பது போல் அழகாய் இருக்கிறது. கார்த்திக்கின் தீவிர காதலும் ஜெஸ்ஸியின் காதலுக்கும் பெற்றோருக்கும் இடையியேயான மனக்குழப்பமும் தெளிவாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் ஆங்காங்கே தன்னைத் தானே கேலி செய்திருப்பது அழகான உத்தி. குறிப்பாக, சிம்பு உதவி இயக்குநராய் சேர “கௌதம்” பேரை சொல்ல.. ‘இந்த மூணு மணிநேரத்தில இரண்டு மணி நேரம் இங்கிலீஷ்லேயே படம் இருக்குமேப்பா’, ‘அவர் ஒரு படமே ரெண்டு வருஷம் எடுப்பாரே..’.. கிச்சுகிச்சு. மேலும் அவரின் பழைய படமும் வசனத்தில் வருகிறது..”அவனவன் பொண்ணத் தேடி அமெரிக்காவுக்கே போறான். நான் கேரளாவுக்கு போக மாட்டேனா என்ன?”
நம்மை படத்தில் கட்டிப் போடும் இன்னொரு விஷயம் வசனம். சுருக்கமான அழகான வசனங்கள்…

முதலில் சொன்ன..
“எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”

அப்புறம் கார்த்திக்-ஜெஸ்ஸி இடையேயான வசனம்..
“நீ அழகா இருக்கே. நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே.. சுமாரான ஃபிகருங்களுக்கே தலைகீழா நிக்கறாங்க.. உன்னை..”
“ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னைப் பாக்கலியோ என்னவோ”… முடிஞ்சே போச்சு…. கௌதம் டச்… 

வழக்கமாய் நாயகன் பேசும் வசனம்..இங்கே ஜெஸ்ஸி வாயிலிருந்து..

“நீ எங்க போனாலும் உன்னைத் தேடி வருவேன்..”
இறுதியாய் உண்மைக்கும் சினிமாக்கும் உள்ள வித்தியாசம் சினிமாவிலேயே காண்பித்திருப்பது சிறப்பு. ஆனால் இது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.

முக்கியமான ஒரு விஷயம்.. உடைகள். த்ரிஷா தேவதை மாதிரி தெரிகிறார். ஆர்ப்பாட்டமில்லாத உடையமைப்புகள். குறிப்பாய் கார்த்திக் முதலில் பார்க்கும் போது வரும் நீல நிற புடவையாகட்டும், கேரளாவில் பட்டுடையில் இரவில் கார்த்திக்குடன் பேசும் போதாகட்டும்… அமெரிக்காவில் கல்யாணக் காட்சியில் வரும் பட்டுப்புடவையாகட்டும். உண்மையிலேயே விண்ணிலிருந்து வந்திறங்கிய தேவதை மாதிரி… அவ்ளோ அழகு.

இறுதியாக… ஆரம்பம் முதலே படத்தில் மூழ்கிவிட்டேன். இறுதிவரை அவ்வளவு ரசிச்சுப் பார்த்தேன். விண்ணைத் தேடி ஒரு தேவதை இந்த மதிக்காக கண்டிப்பாய் வருவாள் என்ற நம்பிக்கை உள்ளது… 

என்னவள்… விண்ணைத் தேடி வருவாளா??

உருகும்…!!
மதி

15 comments:

Monica said...

Hey, had u written a review or the whole story? And you have described things inch by inch...If I read this i loose my interest when i watch the movie..so lemme first watch movie and then read the whole thing. Will leave a comment again.
Btw, "...kadhalai thedi pogavillai"ya? ithu enna kadhai?

Divyapriya said...

padam mulukka trisha va nallaa jollu vitrukeengannu theriyudhu!!! pvr la irundhu madiwala ku pudusaa oru aaru odudhaame, nijamaavaa?

மதி said...

@Monica
படம் பாத்துட்டே.. படி..

@Divya
அழகை ரசிக்கறதுல தப்பில்லே.. ஆனா த்ரிஷாவோட அந்த படத்தோட ஃபீல் நல்லா இருந்தது.. ஒருவகையில நானும் த்ரிஷா கேஸ் தான்.. Confused Party..!! Still Ready to Mingle status-லேயே தெரியலியா..?? படம் பாருங்க.. இன்னும் புரியும்.. எனக்கு ஏன் த்ரிஷாவ புடிச்சதுன்னு..:)

Bharathi said...

nandri. super review. but kadhaiya full a sollirka thevai illa....
btw, poyum poyum trisha va poi ilvo jollu vuturka thevaya illa :)

padam paathutu ennoda comments solren...

மதி said...

@Bharathi
நான் பாதி கதை கூட சொல்லவே இல்லியே.. :( கடைசீல தானே ட்விஸ்ட்டே... படம் பாரு.. என் ஃபீலிங்ஸ் புரியும்.. ஹிஹி

Bharathi said...

ya ya...innaiku night show book pannirken... :) waiting to watch the movie and more importantly 'listen' to maestro's music in Audi-1 of PVR.

SIVA said...

Dei kavalapadadha Trishavae unnaku kedaippada

மதி said...

சிவா..
நான் எப்ப த்ரிஷாவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்.

அழகை அழகா ரசிக்கலாம்.. தப்பேயில்லை..

Unknown said...

விமர்சனம் அருமை...

என்னவள்… விண்ணைத் தேடி வருவாளா?? ;) (ஆனால், இது புரிந்து கொள்ள எத்தனை பேருக்கு "மதி" உள்ளது என்று தெரியவில்லை)

Suresh said...

விமர்சனம் சொல்ல தொடங்கி கதை சொல்லி முடிசிட்டான், இதுல நான் எல்லாம் சொல்லலேன்னு வேற கதை சொல்றான். “விமர்சனத்தை விமர்சிக்க நாலு பேரு கிளம்பி வந்துடுவானுக” அப்படின்னு நீ சொல்றது கேட்குது.

மதி said...

நன்றி விக்னேஷ் மற்றும் சுரேஷ்....

நல்லாவே திட்டுடா சுரேஷூ. :)

Suresh said...

படம் பார்த்துகிட்டே விமர்சனத்தை பதிவு செய்தா இப்படிதான் ஆகும்.உன் மனதில இருக்கிற காதல் தாகத்திற்கு இந்த படம் தண்ணி குடுத்திருக்கு. அதனால தான் உருகுற

krits said...

usssssssssssssssssssss apppaaaaaaaaaaaaaaa thaangala da saami...aduthu neenga dhaan urugi urugi padam edukka poreenga-nu ninaikiren....romance thaangala...btw adhukku dhaan indha blog aa??vaarthailaye figure madakradhukku???;-)
finally solla vandhadha sollidren nice write up....cheers....

மதி said...

@krits
ஹிஹி.. எப்படிங்க கண்டுபுடிச்சீங்க.. வாழ்க்கையில சுவாரஸ்யமே இல்லாத மாதிரி இருந்துச்சு.. அதான் ப்ளாக் ஆரம்பிச்சேன்.. புலம்பலாம்னு. :)

மேற்படி.. தாங்க்ஸ்.. உங்க ஆதரவுக்கு நன்றி..!!!

Unknown said...

According to me,
எனக்கு அந்த படம், அவ்வளவா புடிக்கல-ன்னு என்னால சொல்ல முடியாது, பட் ஒரு தடவ பாக்கலாம்.
எனக்கு த்ரிஷா-உட்பட எந்த பொண்ணுங்களையும் பிடிக்கறது இல்ல.
படம் பார்த்தப்ப, என்னோட college days ஞாபகம் வந்துச்சு.
இந்த உலகத்துல நடக்கற எந்த ஒரு பிரச்சனைக்கும், ஒரு பொண்ணுதான் காரணமா இருப்பால்-ன்னு ஊரே சொல்லுது.
எவ்வளவோ பட்டாலும், யாருக்கும் புத்தி வந்த மாதிரி தெரியலையே? திரும்பத் திரும்ப அங்கேதானே போய் நிக்குரானுங்க.
I agree., its Gautham's own story. but This movie might create some negative impact towards the youth society., especially teenagers.


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design