Monday, March 22, 2010

மௌனராகங்கள்...!

போன வாரம் ஐ.பி.எல் பிரச்சனையால நீயா நானா பார்க்க முடியாமல் போச்சு. அதைப் பார்க்கணும்னு நண்பன் ஆசைப்பட்டான். கொஞ்சம் பொறு… ரெண்டு நாள்ல எப்படியும் நெட்ல வந்துடும்னு சொல்லி.. ஐ.பி.எல்லும் பார்த்தாச்சு.அடுத்து செவ்வாய்..உகாதி விடுமுறை. என்ன பண்றதுனு தெரியாம ரெட்ல உலாவிக்கிட்டு இருந்தபோது நீயா நானா பார்க்கலாம்னு தோணுச்சு. சரின்னு நெட்ல் தேடி கண்டுபுடிச்சு பார்க்க ஆரம்பிச்சோம். பசங்கல பொண்ணுங்களும் பொண்ணுங்களை பசங்களும் புரிந்து கொள்ளும் முயற்சின்னு குறிப்பிட்டாங்க.

ஒவ்வொருத்தர் பேசும் போது சுவாரஸ்யமா இருந்துச்சு. அடுத்தவங்க கதை கேட்கறதுன்னா நமக்கு என்ன சுவாரஸ்யத்துக்கு குறைச்சல்..? இப்படி தான் பலரும் தான் வாழ்க்கைல நடந்தத வச்சு பொண்ணுங்க இப்படி தான், பசங்க இப்படித்தானு ஏகத்தும் பேசினாங்க. கேட்கற வரைக்கும் சந்தோஷம்.

Coming to the point…! இந்த விஷயத்தை பத்தி யோசிச்சா தேவையில்லாம ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி… அநாவசியமா மூளைய குழப்பிக்குவோம். ஏகத்துக்கும் குழம்பினப்புறம் தெரிஞ்ச விஷயம் இது. இன்னார் இந்த சமயத்தில் இப்படித் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடிந்துவிட்டால் வாழ்க்கையில எந்த சுவாரஸ்யமுமே இருக்காதே. நூறு சதவிகிதம் ஒருத்தரைப் பத்தி கணிக்க முடிந்துவிட்டால் அவரை விட்டு விலகிவிட வேண்டும். அப்புறம் அவருடனான வாழ்க்கை ஆபத்தானது..உண்மையிலேயே. சீக்கிரமே போரடித்துவிடும்.

இதே தான் ஆண்பெண் புரிதலுக்கும். முழுமையாக புரிஞ்சுக்கிட்டோம்னு யாரும் சொல்ல முடியாது. ஆனா வாழ்நாள் முழுக்க அந்த புரிதலைத் தேடிப் போற பயணம் சுவாரஸ்யமானது. அதுலேயும் பெண்கள் இப்படித் தான்னு பொதுவா பொத்தம்பொதுவா சொல்ல முடியாது. அந்த நிகழ்ச்சியிலேயே ஒரு ஆணோட கேள்விக்கு பல பதில்கள் வந்தது.. இப்படியா இருக்கலாம்.. அப்படியா இருக்கலாம்னு.. சந்தோஷம். ஆக. இது தான்னு ஒரு பதில் எந்த குழப்பமான புரிதல் சம்பந்தப்பட்ட கேள்விக்கும் கிடையாது.

என்னைப் பொறுத்த வரை ஒரு ஆணா.. பெண்ணின் மனநிலையை அறிந்து கொள்ள முயற்சிப்பது சுவாரஸ்யமான விஷயமே. எந்த வகைப் பெண்ணா இருந்தாலும்… என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு முழுமையா அறிய முடியவிட்டாலும் ஓரளவுக்குத் தான் கணிக்க முடியுது. இத்தனை வருஷம் குடும்பம் நடத்தின என் அப்பாக்கே தெரியும்னு சொல்ல முடியாது. பேசுவது ஒன்றாயிருந்தாலும் குறிப்பிடுவது வேறொன்றா இருக்கும். அந்த குறிப்பை நாம புரிஞ்சுக்கணும். இப்படித் தான் வாழ்க்கையே…

அடுத்ததா பெண்ணுக்கு என்ன புடிக்கும். ஒரு பெண்ணை கவரணும்னா.. என்னென்ன பண்ணனும்னு இன்னும் சரியா யாருக்குமே தெரியாது.. இப்படிப்பட்ட காலக்கட்டதுல ஏன் நான் இதைப்பத்தியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்..

இன்னிக்கு பார்த்த படம்… கே.டி.வியில்.. மௌனராகம்..

உண்மையிலேயே ஃபீல் அண்ட் ஃபீல் ஒன்லி படம். படத்தில் வர்ற கார்த்திக் கேரக்டராகட்டும், மோகன் கேரக்டராகட்டும்.. ரேவதியாகட்டும் அழகாக செதுக்கி இருப்பார் மணிரத்னம். இளையராஜாவின் ஒத்துழைப்போடு அந்த உணர்வு படம் முழுக்க நம்மை ஆக்ரமிச்சிருக்கும். படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் அந்த குழப்பமான பெண்ணின் மனநிலை அவ்ளோ அழகா பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் வந்து நாளானாலும் இன்றைக்கும் இளம்பெண்களின் விருப்பப்படமாக அது இருக்கும். குறிப்பாக கார்த்திக்கின் துறுதுறுப்பும் மோகனின் பொறுமையான குணமும்… ‘வாவ்…சான்ஸ்லெஸ்னு..’ பொண்ணுங்க சொல்லக் கேள்வி.. படத்தோட ஒன்றி பாத்தப்புறம் (எத்தனையாவது முறைன்னு தெரியல)… சட்டென்று மனதுல பட்ட விஷயம் இது… சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.

பெண்களுக்கு… குறிப்பா இன்றைய இளம்பெண்களுக்கு கார்த்திக் மாதிரி காதலனும் மோகன் மாதிரி கணவனும் தான் எதிர்பார்க்கிறார்கள்.. சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.. கல்யாணத்துக்கு முன்னாடியோ காதலிக்கும் போதோ துறுதுறுவென்று சத்யா படத்தில் வரும் ‘வளையோசை’ பாடலில் கமல் செய்யும் குறும்புத்தனங்களை எதிர்ப்பார்க்கும் இளம்பெண்கள் கல்யாணத்துக்கு பின் கணவன் மோகன் மாதிரி அன்பாகவும் தன்னை புரிஞ்சு தனக்காக விட்டுக்கொடுக்கும் நல்லவனாகவும் எதிர்பார்க்கிறார்களா??? ஒருவரே இருபாத்திரங்கள் ஏற்பது சாத்தியமா…??

உலகம் முடியும் வரை இந்தக்கேள்விக்கு விடை கிடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

எனிஹௌ… நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அங்காடி தெரு வரப்போகிறது.. கூடிய சீக்கிரமே பார்த்திடுவேன். ‘நெசமா தான் சொல்றியா’ அஞ்சலியை ட்ரெயிலரில் பார்த்த போதே முடிவு செய்துவிட்டேன்..ஹிஹி

7 comments:

Unknown said...

Good one.. enna ethirpakromnu ellam munnadiye preset panni vekrathillapa..! infact, neenga solrathu oru vithathula correct.. Karthik mathri lover um , Mohan mathri husband um nalla than irukku :) naangalum thana kalyanathukapram responsibility eduthukarom.. responsibility + kurumbuthanam iruntha ..veedu kala kalappavum irukkum, kalakalathu pogamayum irukkum.. :D he he..etho dialogue adikka try paninen..!! aaga motham..veedu santhoshama iruntha sari..! all we need is, husband's attention and love ..:)

மதி said...

மிக்க நன்றி... ரம்யா.. நேற்று பொழுது போகாம சிந்திச்சப்போ தோணினது. ஆனாலும் இது யாரையும் எந்த பக்கத்தையும் குறை சொல்றதுக்காக இல்லை.. கடைசியா சொன்னது சரி... வீடு சந்தோஷமா இருந்தா சரி..!

Unknown said...

மதி... நம்ம கூடதான் துறுதுறுன்னு ஜாலியா , கவர்சிய டிரஸ் பன்னிட்டு இருக்கிற பொன்னு காதலிய இருக்கனும், ஆணா கல்யாணதுக்கு அப்புறம் , காலையில் எழும்பி குளித்து, நெத்தியில குங்குமம் வச்சு, காப்பி கொடுக்கிற பொண்டாட்டி வேனும்முன்னு நினைக்கலையா...???

மதி said...

பென்ஸ்...
நூத்துக்கு நூறு உண்மை...As a matter of fact... அந்த படம் பார்த்தபோது தோணினது இது..? மேலும் நான் பொண்ணுங்கள பத்தி மட்டும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்ததால.. நம்ம இனத்த விட்டுட்டேன்.. ஹிஹி

Unknown said...

thala...Super Ponga...
IPLa arambichu....human relationshippuke poitinga...
Nice....indeed....

மதி said...

thanks bomms

Unknown said...

மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே....
http://singamulla.blogspot.com/2010/04/sogathilum-oru-sugam.html
Wanna replace this song in place of மன்றம் வந்த...


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design